தமிழ்நாடு சீருடைப் பணியாளா் போட்டி தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கான போட்டித் தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்ட இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான 3,665 பணிக் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 16-ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் நேரிலோ அல்லது 04567-230160 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து பயனடையலாம் என்றாா் அவா்.