செய்திகள் :

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டம்: முதல்வர் ஸ்டாலினின் நிலைபாடு என்ன? - அமைச்சர் விளக்கம்!

post image

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன எடுக்க கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதற்குமுன்பே ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடந்தது.

இந்த நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இது மீண்டும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அதில், ``தமிழ்நாடு அரசு, கடந்த 20.02.2020 அன்று 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் (Protected Agricultural Zone – PAZ)" சட்டம், 2020ஐ இயற்றி அதன் மூலம் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் ஹைட்ரோகார்பன், நிலக்கரி படிகேஸ், இயற்கை எரிவாயு, நிலத்தடி நீர் உப்பீடு, சுரங்கங்கள் மற்றும் பிற சுரங்க திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது இல்லை என்றும், தமிழக அரசு இவ்விடயத்தில் தன் நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது.

இதற்கிடையில், M/s. Oil and Natural Gas Corporation Ltd., (ONGC) சார்பில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environment Impact Assessment Authority – SEIAA) M/s. Oil and Natural Gas Corporation Ltd., (ONGC)க்கு சுற்றுச்சூழல் அனுமதியை நேரடியாக வழங்கியச் செய்தி தமிழக அரசு கவனத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து, ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்பப் பெறுமாறு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

விவசாயம் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டமான கொள்கை.

எனவே, தமிழகத்து மட்டுமின்றி எதிகாலத்திலும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் இதுபோன்ற திட்டங்களை செய்ய தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'நக்சல்களுக்கு உதவியவர்' - சுதர்ஷன் ரெட்டியை விமர்சனம் செய்த அமித் ஷா; கிளம்பிய எதிர்ப்பு!

தமிழ்நாட்டை இன்னும் பாஜக-வால் பிடிக்க முடியவில்லை என்பது அந்தக் கட்சியினருக்கு பெரும் கவலை. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தான், திடீரென்று கடந்த ஜூலை மாதம் 21... மேலும் பார்க்க

Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென்ன?

ஈரான் அணுசக்தி விவகாரம்2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை கு... மேலும் பார்க்க

"தமிழ்நாடு முழுவதுமுள்ள CPIM அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்" - பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆளும் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தொட... மேலும் பார்க்க

DMDK: 2026-ல் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' - பிரேமலதா தலைமையில் தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக!

2026ம் ஆண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சிகள் தங்கள் கட்டமைப்பை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தங்களது கட்சியின் மாநில மாநாட்டை அறிவித்துள்ளது தேமுதிக. கே... மேலும் பார்க்க

TVK: "விஜய், விஜயகாந்த் இடத்தை பூர்த்தி செய்வார்..." - தாடி பாலாஜி பேசியது என்ன?

இன்று மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள். அவருக்கு பல்வேறு தலைவர்கள் அரசியல், சமூக ஆளுமைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளரான தாடி... மேலும் பார்க்க