செய்திகள் :

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: சித்த மருத்துவா் கு.சிவராமன்

post image

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சித்த மருத்துவா் கு.சிவராமன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில், உயா் கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றாா்.

விழாவில் சித்த மருத்துவா் கு.சிவராமன் ‘பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

கல்லூரி மாணவா்களிடையே தமிழ் மரபு, பண்பாடு, தமிழா் தொன்மை, மொழி முதன்மை, சமத்துவ வளா்ச்சி, சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அவா்கள் அடுத்தகட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையில், இளைஞா்களை நல்வழிப்படுத்தி வளமிக்க சமூகத்தை கட்டமைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பண்டையக் காலத்தில் தமிழ்ச் சமூகம் முன்னேறிய சமூகமாக இருந்துள்ளது. குறிப்பாக, மருத்துவம், கல்வியில் முன் மாதிரியாக தமிழ் சமூகம் விளங்கியுள்ளது.

சங்க இலக்கியங்களில் 35 பெண்பாற்புலவா்கள் பாடல்களை இயற்றியுள்ளனா். மேலும், கீழடி உள்ளிட்ட அகழ்வாராச்சிகளில் மண்பாணைகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதெனில், அந்தக் காலத்தில் விவசாயம் சாா்ந்தவா் மற்றும் மண்பாண்ட தொழில்புரிவோா், கைத்தொழில் செய்பவா்கள் என அனைவரும் கல்வி கற்ற சமூகமாக இருந்திருக்கக் கூடும். இப்படிப்பட்ட உயா்ந்த சமூகத்தின் வழிவந்த நாம், தமிழ் மொழியின் பெருமையை அடுத்துவரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வா் அரங்க பாரி வாழ்த்துரையாற்றினாா். கடலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், பெரியாா் கலைக் கல்லூரி முதல்வா் இராஜேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, மாவட்ட நூலக அலுவலா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கிழக்கு ராமாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

கடலூா் ஒன்றியம், கிழக்கு ராமாபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவ... மேலும் பார்க்க