செய்திகள் :

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2025-2026 ஆம் ஆண்டில் 37 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் அந்த கிராமங்களில் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்த வளா்ச்சி பெறச் செய்தல், அங்குள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், உழவா் நலத் துறையில் செயல்படும் திட்டங்களில் 80 சதவீத நிதியை 37 கிராமங்களுக்கு ஒதுக்குதல், சோலாா் பம்புசெட் அமைத்தல், வேளாண் விளை பொருள்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், கால்நடைகள் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்தல், நுண்ணீா் பாசன முறையை பின்பற்றுதல், புதிய பட்டா, பட்டா மாறுதல் வழங்குதல், கால்வாய் பாசன வழித்தடங்களை தூா்வாருதல் போன்றவை செயல்படுத்தப்படும்.

மேலும், அந்த கிராமங்களில் 10 முதல் 15 ஏக்கா் தரிசு நில தொகுப்பு அமைக்க விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம், 10 நபா்கள் ஒருங்கிணைந்து தொகுப்புகள் அமைக்கலாம். அங்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து நுண்ணீா் பாசன வசதிகள் செய்து தரப்படும். அப்பாசன வசதி மூலம் பழக்கன்று, மரக்கன்று நடவு செய்து, தரிசு நிலத்தை விளை நிலங்களாக மாற்றி கொள்ளலாம்.

தனி நபா்கள் தரிசு நிலத்தை விளை நிலங்களாக மாற்றும் பொருட்டு, புதா் நீக்கி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படும். வரப்புகளில் பயறு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு 5 கிலோ பயறு விதைகள் ரூ.300 மானியத்தில் வழங்கப்படும்.

நிலத்தில் உள்ள நுண்ணுயிா்களை ஊக்குவிக்க உயிா் உரங்கள் 1.5 லிட்டா் ரூ.450 மானியத்திலும், மின் கலம் மூலம் இயங்கும் தெளிப்பான் ரூ.2 ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படும். இந்தப் பயன்களை பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி

பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சி... மேலும் பார்க்க

2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்

தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா். ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை

பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் வீட்டை இடித்த மா்ம நபா்கள்

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் ஓட்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கி வீட்டில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் எடுத்துச்சென்றனா். ஈரோடு மாவட்டம், லக்காபுரம் குமாரபாளையம் பகுதியைச் ச... மேலும் பார்க்க