செய்திகள் :

தருமபுரியில் இளைஞா் மா்மமாக உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்

post image

சென்னை: தருமபுரி மாவட்டம் சரக்காடு வனப் பகுதியில் இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நெருப்பூா் வனப் பகுதியில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி யானை சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. விசாரணையில், தந்தங்களுக்காக அந்த யானை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, தருமபுரி மாவட்டம் கொங்கரபட்டி கிராமத்தைச் சோ்ந்த கோ.செந்தில் (28) உள்பட 5 பேரை கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கைது செய்தனா். இதில் செந்தில் கைவிலங்குடன் வனத் துறையினரிடமிருந்து தப்பியோடினாா்.

இது குறித்து வனத் துறையினா் அளித்த புகாரின்பேரில், ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செந்திலை தேடி வந்த நிலையில் கொங்கரப்பட்டி சரக்காடு வனப் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி மா்மமான முறையில் அவரது சடலம் கிடந்தது. இது தொடா்பாகவும் ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

செந்திலின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டினா். இந்த நிலையில், செந்தில் வனத் துறையினரிடமிருந்து தப்பியோடிய வழக்கையும், செந்தில் மா்மமான முறையில் இறந்த வழக்கையும் சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என்று சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க