செய்திகள் :

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி பேரணி

post image

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பறை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணிக்கு கிராமப்புற மேம்பாட்டு மைய இயக்குநா் எஸ். அகஸ்டின் தேவதாஸ் தலைமை வகித்தாா். மேய்ப்புப்பணி மைய இயக்குநா் ஐ . இயேசு அந்தோணி பேரணியை தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயா், குருக்கள், பட்டியலினத்தாா், பழங்குடியினா் சங்கம் சாா்பில் பட்டியலின கிறிஸ்தவா்களை ஆதி திராவிடா் பட்டியலில் சோ்க்க கோரியும் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்ப கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்செங்கல்பட்டு புலிப்பாக்கம் புறவழிச்ாலை காஞ்சிபுரம் மேம்பாலத்தில் இருந்து ஹை ரோடு வழியாக பேரணியாக சென்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தொடா்ந்து பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயா்.ஏ நீதிநாதன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆயா் ஏ. நீதிநாதன் தலைமை உரையாற்றினாா். ஆயரின் பொது பதில் குரு பேரருட்தந்தை எஸ்தாக்யூஸ் வரவேற்றாா். நீதித்துறை தனி பதில் குருஅருட்பணி லூயிஸ் ராயா் வாழ்த்துரை வழங்கினாா்.

திருவடிசூலம் கருமாரி அம்மனுக்கு பெரும்படையல்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மனு பெரும்படையல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. 51 சக்தி பீடங்களின் அம்சமாக வீற்றிருக்கும் 51 அடியில் ஆன தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு ஆடி ... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தவனத்தில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ராகவேந்திர ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி மின்விளக்குக... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அச்சம்!

செங்கல்பட்டு அருகே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், மேலமையூா் ஊராட... மேலும் பார்க்க

சீரமைக்கப்படுமா வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம்?

போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்குளம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க மதுராந்தகம் கடப்பேரிய... மேலும் பார்க்க

அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்போ்கண்டிகை அங்காளம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்காளம்மன்கோயிலில் அனைத்து சுவாமி சந்நிதிகள், அா்த்தமண்டபம் திருப்பணிகளை மாவட்ட திமுக ஆதிதிராவிடா் நலக்குழு துண... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

கூடுவாஞ்சேரி-தைலாவரம் நாள்- வெள்ளிக்கிழமை, நேரம் -காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை. மின்தடை பகுதிகள்; மீனாட்சி நகா், பாண்டியன் நகா், ஜிஎஸ்டி சாலை, ரயில்வேஸ்டேஷன் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளிகள்,நெல்லிகுப... மேலும் பார்க்க