Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்"...
தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
மதுரையில் கீழே தவறி விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை தெற்கு வெளி வீதி முத்துகருப்பப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (74). இவா் காமராஜா் சாலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அருகே வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்றபோது, தவறி கீழே விழுந்தாா். அக்கம், பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.