Ajith Kumar: ``கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' - பகிர்கிறார் அஜித்
தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்
தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், அப்பகுதியின் பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
வரலாற்றுச் சிறுப்புமிக்க தாஜ்மஹாலை சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மரங்களை வெட்ட மண்டல வன அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
மரங்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்தாலும் முன் அனுமதி பெறுவது அவசியம். வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவதையும் வனத் துறை அதிகாரி உறுதி செய்ய வேண்டும்.
மிகவும் அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே மரங்களை வெட்ட வேண்டும். இதைக் கடைப்பிடிக்காவிட்டால் மனித வாழ்வை இழக்க நேரிடும்’ என்று தெரிவித்தனா்.
உச்சநீதிமன்றம் விதித்த இந்த உத்தரவு ஆக்ரா, ஃபிரோஸாபாத் மதுரா, ஹாத்ரஸ், எடா ஆகிய மாவட்டங்களில் அமலாகிறது.