செய்திகள் :

தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!

post image

அட்டாரி - வாகா எல்லையில் சிக்கித் தவித்த 21 பாகிஸ்தானியர்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கருதப்படுவதினால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.

இரு நாடுகளும் தங்களது குடிமக்களை உடனடியாகத் தாயகம் திரும்ப அறிவுறுத்தியுள்ளன. மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என காலக்கெடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இத்தகைய சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் அமைந்துள்ள அட்டாரி - வாகா எல்லையின் வழியாக இரு நாட்டு மக்களும் தங்களது தாயகங்களுக்கு திரும்பினர். ஆனால், ஏப்.30 ஆம் தேதியன்று விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததினால், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டது.

எல்லை மூடப்பட்ட சூழலில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகம் செல்ல முடியாமல் நேற்று (மே.1) அங்கேயே முகாமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (மே.2) சுமார் 21 பாகிஸ்தானியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு அவர்கள் எல்லையைக் கடந்துள்ளனர்.

இருப்பினும், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுங்கத் துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளின் அனுமதிக்காக 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தற்போது காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவின் அட்டாரி பகுதியில் சிக்கியுள்ள குடிமக்கள் எல்லையைக் கடந்து பாகிஸ்தானின் வாகாவினுள் நுழைய தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்

பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.பெங்களூரில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனாவிடம் பஹல்காம் பயங்... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மறுநாளே தேர்வெழுதச் சென்ற மாணவி!

ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற ... மேலும் பார்க்க

ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரியாபாந்து மாவட்டத்த... மேலும் பார்க்க

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க