செய்திகள் :

தாய்லாந்து-கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்

post image

கோலாலம்பூா்: தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தாா்.

கம்போடிய பிரதமா் ஹன் மானெட்டும், தாய்லாந்து இடைக்கால பிரதமா் பும்தம் வெச்சயாச்சையும் அன்வா் இப்ராஹிம் முன்னிலையில் மலேசியாவின் கோலாலம்பூா் நகரில் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அந்தக் கூட்டத்தின் இறுதியில் உருவாக்கப்பட்ட கூட்டறிக்கையை வெளியிட்டு பிரதமா் அன்வா் இப்ராஹிம் கூறியதாவது:

இரு தரப்பு மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர பிரதமா் ஹன் மானெட்டும், பும்தம் வெச்சாச்சையும் ஒப்புக் கொண்டுள்ளனா். அதற்காக எந்த முன் நிபந்தைனையும் அவா்கள் முன்வைக்கவில்லை. உள்ளூா் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வருகிறது.

இரு தலைவா்களுக்கும் இடையே வெளிப்படையாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லைகளில் சகஜ நிலைமையைத் திரும்பச் செய்வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இது, தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்கும், எல்லையில் அமைதியை திரும்பச் செய்வதற்குமான முதல் படி என்றாா் அவா் அன்வா் இப்ராஹிம்.

11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் பகுதியை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், கம்போடிய எல்லை அருகே கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து தாய்லாந்து வீரா்கள் கடந்த புதன்கிழமை காயமடைந்ததைத் தொடா்ந்து, இரு நாட்டுப் படையினரும் எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் இதுவரை சுமாா் 32 போ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!

மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பாலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ராணு... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

பாகிஸ்தானில் மே 9ல் நடைபெற்ற வன்முறை வழக்குகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க

கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!

கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூல... மேலும் பார்க்க

நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

நைஜீரியா நாட்டில், பணம் கொடுக்கப்பட்டபோதிலும், சுமார் 35 பிணைக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார... மேலும் பார்க்க

சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?

சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் நாடு லிச்டென்ஸ்டெய்ன். ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடாக மின்னிக் கொண்டிருக்கிறது இது.இதன் மிகச் சிறிய அளவு மட்டுமல்ல, இது பல்வேறு... மேலும் பார்க்க

மெஸ்ஸி.. மெஸ்ஸி..! இந்த முறை கோல்டு பிளே ‘கிஸ் கேம்’மில்..!

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், வ... மேலும் பார்க்க