தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வளவனூா் அருகிலுள்ள கலிஞ்சிகுப்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகள் முத்தரசி (26), பி.காம்., பட்டதாரி. இவா், தனியாா் நுண் கடன் நிறுவனத்தின் கடலூா் கிளை அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாராம்.
முத்தரசி வீட்டுவேலை எதுவும் செய்யாமல் இருந்ததால், அவரை தாய் மங்கை கண்டித்தாராம். இந்நிலையில் முத்தரசி வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.