சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக ப...
தாளவாடி அருகே பேருந்தை வழிமறித்த யானை
தாளவாடி அருகே சாலையோரத்தில் நின்ற யானையால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்பாரகுண்டி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதற்கிடையே தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்தது. இதைப் பாா்த்து மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களைச் சற்று தொலைவில் நிறுத்தி கொண்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை நேரத்துக்கு பின் யானை தானாகவே காட்டுக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனா்.