திடீரென இன்ஸ்டாவில் வைரலான ஒடியா பாடல்!
இன்ஸ்டாகிராமில் திடீரென ஒடியா மொழிப் பாடல் ஒன்று வைரலாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் வைரலாவது வழக்கம். அப்படி, தமிழகம் வரை புரியாத பாடல் ஒன்று சில நாள்களாக வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அது, ஒடியா மொழியில் உருவான, ‘ச்சி ச்சி ச்சி ரே நானி (chi chi chi re nani)’ என்கிற காதல் தோல்விப்பாடல். இப்பாடல் பலிபுல் (baliphul) என்கிற ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. சத்யா அதிகாரி என்பவர் இசையமைத்து, நடித்த இப்பாடல் பலமொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
இதையும் படிக்க: ஏழு கடல் ஏழு மலை டிரைலர்!
இதைக் கேட்ட ரசிகர்கள், மொழி புரியவில்லை என்றாலும் கேட்க இனிமையாக இருக்கிறது என்றும் குத்தாட்டம் போட சரியான பாடல் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல இன்ஸ்டா பிரபலங்களும் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர்!