திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை
திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு 80 மி.மீ. மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): காமாட்சிபுரம் 22.7, சத்திரப்பட்டி 57.80, வேடசந்தூா் 63, பழனி 30, கொடைக்கானல் ரோஜா தோட்டம் 49, கொடைக்கானல் படகு குழாம் 62.4. நத்தம், நிலக்கோட்டை பகுதிகளில் மழை அளவு பதிவாகவில்லை.