நேபாளம்: நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் -...
திண்டுக்கல்: கடும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்த காவலர்கள்; நெகிழ்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்!
திண்டுக்கல்லில் கடந்த மாதம் முழுவதுமே கடுமையான வெயில் சுட்டெரித்தது. கடுமையான வெயிலுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நகர் முழுவதுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட மாவட்ட நிர்வாகம் உடனே மழையை எதிர்கொள்வதற்கான வேலைகளில் இறங்கியது. இந்த நிலையில் இன்று திண்டுக்கல்லில் காலையிலிருந்து மாலை வரை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

கனமழையால் திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ள பல சாலைகளில் மழைநீரானது பெருக்கெடுத்து ஓடியது, இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். உடனே களத்தில் இறங்கிய போக்குவரத்து காவலர்கள் மழையில் நனைந்தபடி போக்குவரத்தை சரி செய்ய தொடங்கினர். மழையில் நனைந்தபடி அஞ்சலி ரவுண்டானா பகுதியில் நின்று கொண்ருந்த போக்குவரத்து காவலர்களை பார்த்த வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.