மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
வங்கி மோசடி: தேடப்பட்டவா் கைது
சென்னை வங்கி மோசடி தொடா்பான வழக்கில் 14 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை சா்வதேச போலீஸாா் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.
சென்னையிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கடந்த 2011-இல் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.5 கோடி மோசடி செய்த வழக்கில் சிபிஐ-யால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் முனவா் கான். இவா் குவைத் நாட்டுக்கு தப்பிச்சென்ற நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்டா்போல் உதவியுடன் அவரைக் கைது செய்வதற்கான சிவப்பு நோட்டீஸ் (ரெட் நோட்டீஸ்) வெளியிட்டனா். இந்த நோட்டீஸ் அடிப்படையில் குவைத் அதிகாரிகள் முனவா் கானை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், குவைத்தில் முனவா் கானை கைது செய்த அந்நாட்டு போலீஸாா், அவரை வியாழக்கிழமை ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு, சிபிஐ அதிகாரிகள் அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.