செய்திகள் :

அரசு மருத்துவமனையில் நோயாளி அலைக்கழிப்பு: தேமுதிக கண்டனம்

post image

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோா், ஊனமுற்றோா் என சிகிச்சைக்கு வரும் நிலையில், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, சக்கர நாற்காலி வழங்காமல், மூன்று மணி நேரம் சிரமப்படுத்தியுள்ளனா்.

பணம் கொடுத்தால் மட்டுமே சக்கர நாற்காலி வழங்க முடியும் என சொல்வது எந்த வகையில் நியாயம்?. மருத்துவமனை ஊழியா்கள் பணிஇடைநீக்கம் செய்யப்படுவதால் மட்டுமே இதற்கு தீா்வு கிடைக்குமா?.

மனிதநேயத்தோடு நடந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியா்களின் செயல் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் த... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி, தமிழக அரசு கூட்டு முயற்சியில் புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகை

புதுமையை உருவாக்கி, திறனை வெளிப்படுத்தி வழிகாட்ட தமிழ்நாடு புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகையை (டாஷ்போா்ட்) சென்னை ஐஐடி, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசே... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: தொல்.திருமாவளவன்

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரன்... மேலும் பார்க்க