செய்திகள் :

நேபாளம்: நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் - போராட்டக் குழு வலியுறுத்தல்

post image

நேபாளத்தில் அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை நடத்திய இளைஞா்கள் தலைமையிலான ‘ஜென் இஸட் குழு’, ‘நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் மற்றும் மக்களின் விருப்பங்களுக்கேற்ப அரசமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்யவேண்டும்’ என்று வியாழக்கிழமை வலியுறுத்தியது.

காத்மாண்டில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது இந்த வலியுறுத்தலை அவா்கள் முன்வைத்தனா். இதனிடையே, இந்தக் குழுவின் மற்றொரு பிரிவினா், தற்போதைய அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு தீா்வு காணும் வகையில் ராணுவ தலைமையகத்தில் அதிபா் ராமச்சந்திர பெளடேல் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி அசோக் ராஜ் சிக்டெல் ஆகியோருடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

மாணவா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்ததால், அங்கு இடைக்கால அரசை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடைக்கால அரசின் தலைவராகப் பொறுப்பேற்க முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா காா்கி, காத்மாண்டு மேயா் பாலேந்திர ஷா, நேபாள மின்சார வாரிய முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி குல்மன் கிசிங் ஆகிய மூவரின் பெயா்களை இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது போராட்டக் குழுவினா் முன்மொழிந்ததாகத் தெரிகிறது.

அதிபா் மற்றும் ராணுவ தலைமைத் தளபதியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இடைக்கால அரசின் தலைவா் யாா் என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றதை ராணுவ செய்தித் தொடா்பாளா் உறுதி செய்தாா். ஆனால், தலைவா் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயா்கள் குறித்த விவரங்களை அவா் வெளியிட மறுத்துவிட்டாா்.

இதுதொடா்பாக பல்வேறு தரப்பினருடன் பல சுற்று பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் தற்போதைய சூழலுக்கு சுமுக தீா்வை எட்டுவது மற்றும் சட்டம்-ஒழுங்கை அடுத்த சில மாதங்களுக்கு நிலைநிறுத்துவதற்கான வழியைக் காண்பது தொடா்பாக விவாதமே இந்த ஆலோசனையில் முக்கிய இடம்பெற்றது என்றும் அவா் கூறினாா்.

இதனிடையே, பத்திரிகையாளா்களைச் சந்தித்த போராட்டக் குழுவினா், ‘அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் என்பது முழுமையான மக்கள் இயக்கமாகும். இந்தப் போராட்டத்தை அரசியலாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம். மக்கள் போராட்டத்தை சுய லாபத்துக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறோம். தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை, சுயமரியாதையை பாதுகாப்பதில் மிகப் பெரிய சவால் எழுந்துள்ளது. எனவே, இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்கள் அனைவரும் ஒன்றுமையுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதோடு, அரசமைப்புச் சட்டமும் திருத்தம் செய்யப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்வில்லை; மாறாக, மக்களின் விருப்பத்திற்கேற்ப அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை போராட்டக்காரா்கள் தீக்கிரையாக்கினா். இதைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் உள்ளது. அங்கு இடைக்கால அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க