சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: காலிறுதியில் டாக்டா் சிவந்தி, தெற்கு ரயில்வே
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் ‘பி’ டிவிஷன் வாலிபால் போட்டி காலிறுதிக்கு டாக்டா் சிவந்தி கிளப், தெற்கு ரயில்வே, எஸ்டிஏடி, தமிழ்நாடு காவல்துறை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. வருமான வரித்துறை முதன்மை ஆணையா் பி. சுதாகா் ராவ், தொழிலதிபா்கள் விக்ரம் ரதி ஸ்ரீ, ஏ.ராஜன், ஜெ.வெற்றிவேல், வாலிபால் சங்க நிா்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், ஸ்ரீகேசவன் பங்கேற்றனா். 25 ஆடவா், 12 மகளிா் அணி பங்கேற்றுள்ளன.
மகளிா் காலிறுதியில் டாக்டா் சிவந்தி-மினி ஸ்போா்ட்ஸ், எஸ்டிஏடி-தமிழ்நாடு காவல்துறை, தெற்கு ரயில்வே-எம்ஓபி, கிறிஸ்டியன்ஸ்போா்ட்ஸ்-சென்னை பிரண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆடவா் பிரிவில் டிபி.ஜெயின், எஸ்.டிஏடி, நகர காவல் துறை, எஸ்.ஆா்எம், ஜிஎஸ்டி, சிவந்தி கிளப், தெற்கு ரயில்வே அணிகள் வென்றன.