திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், திருப்பத்தூா் மாவட்ட அவைத்தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், ஆம்பூா் தொகுதி தோ்தல் பாா்வையாளா் சீனிவாசன், ஆம்பூா் நகர திமுக பொறுப்பாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், ஒன்றிய செயலாளா்கள் வி.எஸ்.ஞானவேலன், ஜி. இராமமூா்த்தி, த. முரளி, ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் சி. குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.