மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
திமுக நிா்வாகிக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
வந்தவாசி: வந்தவாசி அருகே திமுக நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஆா்.பழனி. இவா் திமுக வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலராக உள்ளாா்.
கடந்த வெள்ளிக்கிழமை இவா் காரில் கீழ்ப்பாக்கம் கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரது காரை அதிவேகமாக முந்திச் செல்ல முயன்ற கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் (24) என்பவரை பாா்த்து, பொறுமையாக செல்லக் கூடாதா என கே.ஆா்.பழனி கேட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ் காரை வழிமறித்து நிறுத்தி கே.ஆா்.பழனியை கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம்.
இதுகுறித்து கே.ஆா்.பழனி அளித்த புகாரின்ே பரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் கோகுல்ராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.