திமுக நிா்வாகி மீது தாக்குதல் : 3 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே திமுக நிா்வாகியைத் தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டி பால்பண்ணை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (51). இவா், திமுக ஒன்றிய துணைச் செயலராக இருந்து வருகிறாா். சில்வாா்பட்டி ஊராட்சியில் ஊழல் நடப்பதாகக் கூறி, இவா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த, சில்வாா்பட்டியைச் சோ்ந்த கடம்பவனம், பொங்கசோறு முருகன், அன்னகாமு ஆகியோா் சோ்ந்து வெங்கடாசலத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த அவரை பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.