செய்திகள் :

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

post image

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுடனான சந்தித்த செல்லூர் கே. ராஜு கூறியதாவது ``வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது, செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அமைச்சராக தொடர விருப்பமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது, திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்.

நீதிமன்ற வழக்குகள் உள்ள அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிக்கு மாற்ற வேண்டும். அதிமுகவில் அமைச்சர்கள் மீது வழக்குகள் இருந்தால் இதுபோன்ற நடவடிக்கையைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியும் எடுத்திருப்பார்கள், வழக்கில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் மீது முதல்வர் சாட்டையைச் சுழற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர்; அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். தவறு செய்த அதிமுக அமைச்சர்கள் 10 பேரை ஒரே இரவில் அமைச்சரவையில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார், ஆனால், வழக்கில் தொடர்புடைய அமைச்சர்கள் மீது மு.க. ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றாமல், அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்து வருகிறார்.

இதையும் படிக்க:கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை? மெக்சிகோ அதிபர் எச்சரிக்கை!

தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே முடிவுகளை எடுப்பார்.

அதிமுக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்துள்ள பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அதிமுக குறித்து அண்ணன் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பேச்சுக்களுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவுக்குள் எந்த பிளவும் இல்லை; ஊடகங்கள்தான் ஊதி ஊதி பெரிதாக்குகிறது.

தவெக தலைவர் விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்: இபிஎஸ்

விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மயிலாடுதுற... மேலும் பார்க்க

ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாதுரை பேசிய உரையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வா... மேலும் பார்க்க

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித... மேலும் பார்க்க

தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு!

தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மற்றுமொரு சான்று கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், ... மேலும் பார்க்க

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் - முதல்வர்

தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண... மேலும் பார்க்க