திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
திம்பம் மலைப் பாதையில் பனிமூட்டம்
திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை நிலவிய திடீா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை பனிமூட்டம் நிலவியது. இதனால், சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனா்.
இதேபோல தாளவாடி மலைக் கிராமங்களிலும் பனிமூட்டம் படா்ந்து காணப்பட்டது. இந்த திடீா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினா். இந்த பனிமூட்டம் முற்பகல் 11 மணி வரை நீடித்த நிலையில், லேசான வெயில் வந்த பின்பு பனிமூட்டம் விலகத் தொடங்கியது.