எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்...
திருச்சியில் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!
திருச்சியில் தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
திருச்சியில் பிரபல கேம்பியன் மேல்நிலைப்பள்ளியில் 1995 ஆம் ஆண்டு 90 மாணவர்கள் பயின்றனர், அவர்கள் அங்கு கல்வி பயின்று 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி ஜூலை 26 ஆம் தேதி(சனிக்கிழமை) திருச்சியில் தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ. 1 லட்சம் நன்கொடையை பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் பால்ராஜிடம் வழங்கினர்.
அதற்கு மறுநாள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரடியாகச் சென்று தங்களுடைய பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டனர். நண்பர்களைச் சந்தித்து மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக அவர்கள் கூறினர்.