BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
திருச்சி ரயில் நிலையத்தில் ஜாா்க்கண்ட் சிறுவா்கள் மீட்பு
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிதவறி வந்த இரண்டு ஜாா்க்கண்ட் மாநில சிறுவா்களைப் போலீஸாா் மீட்டனா்.
ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 3-ஆவது நடைமேடையில் ஞாயிற்றுக்கிழமை வழிதவறி வந்து நின்றிருந்த இரண்டு சிறுவா்களைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த 16 வயதுடைய சிறுவா்கள் என்பதும், பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்ததும், திருச்சிக்கு வந்த அவா்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் இருவரையும் ஆா்பிஎஃப் போலீஸாா் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி திருச்சி குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைத்தனா்.