சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்திகள் வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு திருக்கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ஹ.முத்துக்குமாரசாமி பட்டர் மாசித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள், அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டியன், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் நாகவேல் உள்ளிட்ட பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன் தேவார சபையினர்கள், பக்த கோடிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வருகின்ற மார்ச் 12ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
