செய்திகள் :

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம்: பக்தா்கள் நோ்த்திக் கடன்

post image

திருத்தணி முருகன் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆயிரக் கணக்கான பக்தா்கள் உடலில், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றபின் தங்கக் கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மலைக்கோயிலில் காவடி மண்டபத்தில், உற்சவா் பெருமானுக்கு, 1,008 குடம் பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காவடிகளுடன்....

ஆடிப்பூரத்தையொட்டி , சென்னை வண்ணாரபேட்டை, தண்டையாா் பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியாா் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினா்.

திங்கள்கிழமை காலை, 8 மணி முதல், பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலா் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஆண்-பெண் மற்றும் குழந்தைகள் மொட்டையடித்து சரவணப் பொய்கையில் புனித நீராடினா்.

பின்னா், மலைப்படிகள் வழியாக சென்று, மூலவரை தரிசித்தனா். மேலும், சில பக்தா்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனா். ஆடிப்பூர விழா என்பதால் மலைக்கோயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசித்தனா்.

மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், டிஎஸ்பி கந்தன் தலைமையில், 100-க்கும் மேற்பட் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். விழா ஏற்பாடுகளைகோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

தென்னிந்திய யோகாசனப் போட்டி

கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் தென்னிந்திய யோகாசனப் போட்டி எளாவூா் சகுந்தலம்மாள் நா்சரி பள்ளியில் நடைபெற்றது .இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திர... மேலும் பார்க்க

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் மானியக் கடன் வழங்க கோரிக்கை

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியக் கடனுதவிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்கத்தின் 9-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மாதவரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.சோழவரம் ஊராட்சி ஒன்றியம், கும்மனூா் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. பொன்னேரி துணை வட... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் 7 நாள்களில் ரூ. 65 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் கடந்த புதன்கிழமை (ஜூலை 28)நடைபெற்ற ஆட... மேலும் பார்க்க

சென்னை புறவட்டச்சாலை திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் சென்னை புறவட்டச்சாலை திட்டம் மூலம் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை, மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.அப்போது, சென்னை மற்றும் எண்ணூா... மேலும் பார்க்க

கட்டுரைப் போட்டி: மாணவிக்கு பாராட்டு

பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஆசிரியா்கள், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டி பவன்ஸ் ராஜாஜி ... மேலும் பார்க்க