`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விள...
Brad Pitt: 'F1' வெற்றிக்குப் பிறகு பிராட் பிட் படம் - ஒன்றிணையும் ஹாலிவுட்டின் டாப் இயக்குநர்கள்!
'F1' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தத் திரைப்படத்தின் பணிகளில் இறங்கிவிட்டார் பிராட் பிட்.

குவென்டின் டாரன்டினோவின் (Quentin Tarantino) 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood)' திரைப்படத்தின் கிளிஃப் பூத் (Cliff Booth) கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் திரைப்படமான 'தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத்' படத்தில்தான் பிராட் பிட் நடிக்கவிருக்கிறார்.
2019-ம் ஆண்டு குவென்டின் டாரன்டினோவின் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படம் வெளிவந்திருந்தது.
டாரன்டினோ அதன் பிறகு 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் கதையை விரிவுபடுத்தி நாவலாக 2021-ம் ஆண்டு எழுதத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து, 'தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத்' திரைப்படத்திற்கு திரைக்கதையையும் எழுதினார்.
இப்படத்தை 'ஃபைட் கிளப்', 'செவன்' போன்ற படங்களை இயக்கிய டேவிட் ஃபின்சர் இயக்கவுள்ளார் என்ற செய்தி எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

ஹாலிவுட்டின் இரண்டு முக்கியமானவர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைவது உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.
இத்திரைப்படம் நடிகர் பிராட் பிட், இயக்குநர் டேவிட் ஃபின்சர் கூட்டணி இணையும் மூன்றாவது திரைப்படம்.
1970-களில் நடக்கும் கதைக்களம் என்பதால் படத்திற்காக பிரத்தியேகமாக கலிஃபோர்னியாவில் செட்டும் அமைத்திருக்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...