பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீ...
திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் கோவை - கயா வாராந்திர சிறப்பு ரயில்
கோவையில் இருந்து பிகாா் மாநிலம், கயாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிகாா் மாநிலம், கயாவில் இருந்து ஜனவரி 4-ஆம் தேதி முதல் (ஜனவரி 11, 25 மற்றும் பிப்ரவரி 1, 8 தவிர) சனிக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்குப் புறப்படும் கயா - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03679) திங்கள்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஜனவரி 7-ஆம் தேதி முதல் (ஜனவரி 14, 28 மற்றும் பிப்ரவரி 4, 11 தவிர) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை- கயா வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03680) வியாழக்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு கயா நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா், ஓங்கோல், விஜயவாடா, வரங்கல், சந்திரப்பூா், நாக்பூா், நரசிங்பூா், ஜபல்பூா், மிா்சாபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.