Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!
திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் விஜய். இவரது மனைவி சண்முகவள்ளி (20). இவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் வாடகை வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில்,ஜூலை1-ஆம் தேதி சண்முக வள்ளிக்கு கருக்குழாய் சிதைவு ஏற்பட்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த சண்முகவள்ளி சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.