செய்திகள் :

திருமண பந்தத்தில் இணைந்த சுந்தரி தொடர் நடிகர்!

post image

சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணு மேனன் தனது நீண்ட நாள் காதலி அபியாத்ராவை திருமணம் செய்யவுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன். இவர், தற்போது ரோஜா - 2 தொடரில் நடித்து வருகிறார்.

நடிகை ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடிக்கும் புதிய தொடரொன்றில் ஜிஷ்ணு மேனன் நாயகனாக நடிக்கிறார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க: நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

இதனிடையே, சுந்தரி தொடர் நடிகர் ஜிஷ்ணு மேனன், ஒப்பனைக் கலைஞர் அபியாத்ராவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார்.

இந்நிலையில், ஜிஷ்ணு மேனன் - அபியாத்ராவுக்கு சில நாள்களுக்கு முன்பு உறவினர்கள், நண்பர்கள் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

ஜிஷ்ணு மேனன் - அபியாத்ரா திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நிலையில், சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்ரனர்.

மேலும், இவர்களது திருமணத் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகை சூடிய ஓ ஜுன் சங், மிவா ஹரிமோட்டோ!

டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் சென்னை 2025 போட்டியில் ஆடவா் பிரிவில் தென் கொரியாவின் ஓ ஜுன் சங், மகளிா் பிரிவில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ சாம்பியன் பட்டம் வென்றனா். சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு ... மேலும் பார்க்க

லக்மே ஃபேஷன் வீக் 2025 - புகைப்படங்கள்

ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ராவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.ரேம்ப் வாக் செய்யும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்... மேலும் பார்க்க

ரூ.1.72 லட்சத்துக்கு சிக்கந்தர் பட டிக்கெட்! அதிர்ச்சி அளிக்கும் சல்மான் கான் ரசிகர்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர் ஒருவர் சிக்கந்தர் படத்துக்கான டிக்கெட்டுகளை ரூ.1.72 லட்சத்துக்கு வாங்கி அதனை இலவசமாக விநியோகித்துள்ளார். இதற்கான நிதித் தொகையை சல்மான் கான் கொடுத்தாரா? என சமூக வலைத... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்

நத்தம் அருகே நத்தமாடிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நேரில் கண்டு மகிழ்ந்தனர். விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வி... மேலும் பார்க்க

சர்தார் - 2 அறிமுக புரோமோ!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 படத்தின் அறிமுக புரோமோவை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது... மேலும் பார்க்க

பிரபாஸ் பட அப்டேட் பகிர்ந்த இயக்குநர் சந்தீப்!

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட்டை மெக்சிகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சந்தீப் வங்கா கூறியுள்ளார். அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் ... மேலும் பார்க்க