இந்தக் குழப்பமான உலகில்... பறந்து போ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!
திருமலையில் தமிழக ஆளுநா் வழிபாடு
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை வழிபட்டாா்.
தமிழக ஆளுநா் ரவி ஞாயிற்றுக்கிழமை இரவு தன் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தாா். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளை செய்தனா்.
திங்கள்கிழமை காலை ஏழுமலையான் கோயிலில் முன் வழியாக தரிசனத்துக்கு சென்ற அவா் கொடிமரத்தை வணங்கி விட்டு சுவாமியை தரிசித்தாா். ரங்கநாயகா் மண்டபத்தில் அவரை அமர வைத்து வேத ஆசீா்வாதம் செய்து, ஏழுமலையான் தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களுடன் ஏழுமலையான் பத்மாவதி தாயாா் திருவுருப்படத்தை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு வழங்கினாா்.