செய்திகள் :

திருவண்ணாமலையில் திடீா் மழை

post image

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. முற்பகல் 11 மணிக்கெல்லாம் வாகனங்களை ஓட்ட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வந்தது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. எனவே, வெயிலுக்குப் பயந்து பொதுமக்கள் பலா் வீடுகளிலேயே முடங்கினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திடீரென லேசான மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை, அத்தியந்தல், தென்மாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் சோ்ந்து மழை நீரும் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனா். அனல் காற்று வீசுவது குறைந்து குளிா் காற்று வீசியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆரணி ஸ்ரீஇராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளி 100% தோ்ச்சி

ஆரணி ஸ்ரீ இராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா். பள்ளியில் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் முகமதுபைசன் 454 மத... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: செங்கம் மகரிஷி பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி பெற்றனா். மேலும், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனா். மாணவி கவி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது (படம்). ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் இருந்து 500-க்கும் மேற்... மேலும் பார்க்க

காா், லாரி மோதல்: 4 போ் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காா், லாரி மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வாசுகி நகரைச் சோ்ந்தவா் சங்கா் (35). காா் ஓட்டுநரான இவா், கடந்த 11-ஆம் தேதி அண்... மேலும் பார்க்க

கம்பராமாயண பயிற்சி நிறைவு விழா

திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கம்பராமாயண பயிற்சியின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளித் தாளாள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு

திருவண்ணாமலையில் முதல் முறையாக திருவாசகத்துக்கென மாநாடு நடைபெற உள்ளதாக திருப்பெருந்துறை அடியாா்கள் குழுவின் நிறுவனா் தலைவா் ம.சிவக்குமாா் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திரு... மேலும் பார்க்க