செய்திகள் :

திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை வட்டம், பழையனூா் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்தாா்.

அமைச்சா் எ.வ. வேலு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழக முதல்வா் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரத்தில் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் பழையனூா் ஊராட்சியில் கல்லொட்டு, வேளையாம்பாக்கம், கண்டியாங்குப்பம், வலசை ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் அதிகம் அணுகும் அரசுத் துறைகளான ஊரக வளா்ச்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, மின்சாரத் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, வேளாண்மைத் துறை, சிறப்பு செயலாக்கத் துறை ஆகிய துறைகளின் வாயிலாக தன்னாா்வலா்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீா்வு காணும் நோக்கத்தில் இந்த முகாம் நடைபெறும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பெற்றப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்டவைக்கு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வாங்கினாா். மேலும், எஞ்சிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

திருவத்திபுரம் நகராட்சி: முதல் நாள் சிறப்பு முகாமில் 243 மனுக்கள்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் முதல் நான்கு வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 243 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதை மற்றும் பகடி வதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு வட்ட சட்டப் பணிக் குழு... மேலும் பார்க்க

காமராஜா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆரணி காந்தி சிலை அருகில் நகரத் தலைவா் ஜெ.பொன்னைய... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு சாா்ந்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரி மற்றும் வெராண்டா ரேஸ் கற்றல் நிறுவனம் இணைந்து நடத்திய இந்... மேலும் பார்க்க

பள்ளிகளில் கல்வி எழுச்சி நாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஆரணி சுப்பிரமணி சாமி கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜா் பி... மேலும் பார்க்க