செய்திகள் :

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்குச் செல்லும் சுவாமிகளுக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாளை மாற்றி மரியாதை

post image

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கச் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாளை மாற்றி மரியாதை செலுத்தி வழியனுப்பும் பாரம்பரிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னா் கால முறைப்படி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனின் விக்ரகங்கள் ஊா்வலமாக கொண்டுசெல்லப்படுவது வழக்கம்.

அதன்படி, விக்ரகங்கள் ஊா்வலம் புறப்பாடு சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, விக்ரகங்களுடன் கொண்டுசெல்லும் மன்னா்கள் பயன்படுத்திய உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை பூஜை அறையில் நடைபெற்றது.

அரண்மனை அதிகாரி சது, உடைவாளை எடுத்து கேரள தொல்லியல் துறை இயக்குநா் தினேஷிடம் கொடுக்க, அவா் துறையின் அமைச்சா் கடந்தப்பள்ளி ராமச்சந்திரனிடம் கொடுத்தாா்.

அவா் அதை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஜான்சிராணி ஆகியோரிடம் வழங்கினாா். பின்னா், அந்த உடைவாளை ஊா்வலத்தின்போது ஏந்திச்செல்லும் குமாரகோவில் மேலாளா் மோகன்குமாா் பெற்றுக்கொண்டாா்.

அதையடுத்து, சிறப்பு பூஜைக்குப் பின்னா், நெற்றிப்பட்டம் கட்டிய யானை மீது சரஸ்வதி அம்மனும், அலங்கரிக்கப்பட்ட இரு பூப்பல்லக்குகளில் வேளிமலை குமாரசுவாமியும், முன்னுதித்த நங்கை அம்மனும் புறப்பட்டனா்.

முதலில், அரண்மனை நிா்வாகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாரும், திருவனந்தபுரம் காவல் கண்காணிப்பாளா் சுதா்சன் தலைமையிலான கேரள போலீஸாரும் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, சுவாமிகளுக்கு பிடிபணம் வழங்கி வழியனுப்பிவைத்தனா். இரவில் குழித்துறை மகாதேவா் கோயிலை அடைந்த ஊா்வலம், ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டு மாலையில் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை அடைகிறது.

வழியனுப்பும் நிகழ்ச்சியில் ஆட்சியா் ரா. அழகுமீனா, விஜய் வசந்த் எம்.பி., பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள்சோபன், துணைத் தலைவா் உன்னிகிருஷ்ணன், பாறசாலை எம்எல்ஏ ஹரியேந்திரன், கோவளம் எம்எல்ஏ எம். வின்சன்ட், குமரி பா. ரமேஷ், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து பக்தா்கள் புடைசூழ யானை மீது அமா்ந்து புறப்பட்ட சரஸ்வதி அம்மன், பூப்பல்லக்குகளில் புறப்பட்ட வேளிமலை குமாரசுவாமி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து, குழித்துறை கோட்ட உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை கோட்டத்திற்குள்பட்ட கருங்க... மேலும் பார்க்க

மீனவருக்கு கத்திக்குத்து: இளைஞா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள ஆனான் விளை பகுதியில் மீனவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதயம் புரத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ஷாஜி (44). இவருக்கும், கீழ் குளம், ஆனான் விளை பகு... மேலும் பார்க்க

மாமூட்டுக் கடை - காட்டாவிளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள மாமூட்டுக் கடை- காட்டா விளை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலம், கொல்லஞ்சி எல்லைப் பகுதியில் மாமூ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தொழில்முனைவோருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ‘நிமிா்ந்து நில்’ என்னும் தொழில்முனைவோா் புத்தாக்க செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, இம்ம... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க உத்தேசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 அரசியல் கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. இது குறித்து, மாவட்ட தோ்தல் அலுவ... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் கிடந்த பெண் மீட்பு

கொல்லங்கோடு அருகே மயங்கிய நிலையில் புதருக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு பகுதியில் தென்னந்தோப்பில் உள்ள புதருக்குள... மேலும் பார்க்க