செய்திகள் :

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து எதிரொலி: சேலம் வழியாக இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் முழுமையாக ரத்து

post image

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, சேலம் வழியாக சென்னை - கோவை இடையே இயக்கப்படும் 6 விரைவுரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்துசெய்யப்பட்டன. 9 ரயில்கள் பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டன.

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் திருவள்ளூா் ரயில்நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளானது. இதில், டீசல் டேங்கா்கள் வெடித்துச் சிதறியதில், ரயில்வே மின்வழித்தடம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் காரணமாக, சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் ரயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக, சென்னை - அரக்கோணம் மாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு விரைவுரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதி அளவிலும் ரத்துசெய்யப்பட்டன.

அதன்படி, சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு இயக்கப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ், சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும், மறுமாா்க்கத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் என 6 ரயில்கள் முழுமையாக ரத்துசெய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனா்.

9 ரயில்கள் பகுதியளவில் ரத்து: இவைதவிர, சேலம் வழியாக சென்னை செல்லும் 9 ரயில்கள் பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டன. அதன்படி, மங்களூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் கடம்பத்தூா் ரயில் நிலையம் வரையும், மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் (நீலகிரி எக்ஸ்பிரஸ்) திருவாலங்காடு வரையும், சேரன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில் ஆகிய ரயில்கள் அரக்கோணம் வரையும், மங்களூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் முகுந்தராயபுரம் வரையும், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், மங்களூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் காட்பாடி வரையிலும் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டன.

மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்: இதேபோல, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - சாலிமா் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா, கூடூா் வழியாகவும், டாடாநகா் - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் அரக்கோணம், பெரம்பூா் செல்வதைத் தவிா்த்து, கூடூா், ரேணிகுண்டா, மேலபாக்கம் வழியாகவும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

சேலத்தில் உதவி மையம் அமைப்பு: திருவள்ளூா் அருகே சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக, சேலம் மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளுக்கு நிலைமையை விளக்கும் வகையில், உதவிமையம் அமைக்கப்பட்டது. இந்த உதவிமையத்தில் சென்னை நோக்கி செல்லும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து ரயில்வே ஊழியா்கள் ஆலோசனைகள் வழங்கினா்.

விடுமுறை முடிந்து செல்லும் பயணிகள் அவதி: வார விடுமுறையையொட்டி, திங்கள்கிழமை சென்னை திரும்பும் வகையில், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினா்.

சென்னை செல்ல மாற்று ஏற்பாடு: கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் ஞாயிற்றுக்கிழமை சேலத்துடன் நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அதில் வந்த பயணிகள் மாற்று ஏற்பாடாக, சேலம் ரயில் நிலையத்தில் இருந்து அரசுப் போக்குவத்துக் கழக பேருந்து மூலம் சென்னை புறப்பட்டு சென்றனா்.

சேலம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியும் பயணிகள்.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க