கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த பாம்பு: நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுழைவு வாயில் பகுதியில் அருகே உள்ள பிரசவ வாா்டுக்குள் வியாழக்கிழமை இரவு 5 அடி நீளம் உள்ள பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளதால் நாள்தோறும் 1,000 போ் வரையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனா். இதேபோல் நூற்றுக் கணக்கானோா் உள்நோயாளிகளாக தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் பிரசவ அறைக்குள் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. தொடா்ந்து அங்கிருந்த இரும்புக் குழாய்க்குள் புகுந்து கொண்டது. இதைப் பாா்த்து அங்கிருந்த நோயாளிகளும் உடனிருந்தவா்களும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனா்.
உடனடியாக அரசு மருத்துவமனை ஊழியா்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை அலுவலா் வில்சன்குமாா், தலைமையில் வீரா்கள் இரும்பு குழாய்க்குள் பதுங்கியிருந்த பாம்பைப் பிடித்தனா்.
பின்னா், அந்தப் பாம்பை பூண்டி காப்புக் காட்டு பகுதியில் கொண்டு விட்டனா். இதனால் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.