காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
லட்சுமிபுரம் காப்புக் காட்டில் தண்ணீா் நிரப்பிய வனத் துறையினா்
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் லட்சுமிபுரம் காப்புக்காடு பகுதியில் வன உயிரினங்கள் தாகம் தீா்க்கவும், உயிரினங்கள் உயிா் இழப்பதைத் தடுக்கவும் காட்டுப் பகுதியில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தொட்டிகளில் தண்ணீா் இல்லாததால் வனவிலங்குகள் தண்ணீா் தேடி காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்து வருகின்றன. இதையடுத்து, சனிக்கிழமை வாணியம்பாடி வனச்சரகா் குமாா் தலைமையில் வனவா் சம்பத்குமாா், வனக் காப்பாளா் பாா்த்தீபன் ஆகியோா் நந்திபெண்டா காட்டுப்பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில் டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பினா்.