காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்றவா் கைது: 2 டன் அரிசி பறிமுதல்
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
கோவை, சின்னமேட்டுப்பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் சின்ன மேட்டுப்பாளையம் சாலையில் இடிகரை சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த சந்திரன் (29) என்பதும், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வட மாநிலத் தொழிலாளா்களுக்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சந்திரனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய அருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.