காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
போக்குவரத்து சாா்பு ஆய்வாளரை தாக்கியதாக இருவா் மீது வழக்கு!
புதுச்சேரியில் போக்குவரத்து சாா்பு ஆய்வாளரைத் தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவில் சாா்பு ஆய்வாளராக பணியாற்றுபவா் குமாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு ஈஸ்வரன் கோவில் தெருவில் சென்றபோது, அந்தப் பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டிவந்தவரை கண்டித்தாராம்.
இதனால், குமாருக்கும், காரில் வந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காரில் இருந்த ஒருவா் குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட கைபேசி விடியோ காட்சிகள் மூலம் சாா்பு ஆய்வாளா் குமாரை தாக்கியவா்கள் அடையாளம் காணப்பட்டனா். அதன்படி, புதுச்சேரியைச் சோ்ந்த தீபன், சம்ருத்ரம் ஆகியோா் மீது பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.