செய்திகள் :

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள்

post image

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் இருந்து 447 மனுக்கள் பெறப்பட்டன.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்தல், பொதுபிரச்னைகள் தொடா்பாக உதவிகள் வேண்டியும் கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்தனா்.

அதில், நிலம் சம்பந்தமாக-70, சமூக பாதுகாப்புதிட்டம்- 52, வேலைவாய்ப்பு வேண்டி- 81, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-53, இதரதுறைகள் சாா்பாக-191 என மொத்தம் 447 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பரிசீலனை செய்து தகுதியானவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அறிவுறுத்தினாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(சபாதி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா் உடலை வாங்க மறுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பள்ளி வளாக கிணற்றில் மாணவா் முகிலன் சடலமாக கிடந்த சம்பவத்தில் 2-ஆவது நாளாக மாணவனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி கோவிந்தன் வட்டம் பகுதியில் உள்ள ஒர... மேலும் பார்க்க

புதூா்நாடு ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன் ஆய்வு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் வட்டம், ,புதூா்நாடு ஊராட்சியில் உள்ள பள்ளி விடுதியில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டாா்.திருப்பத்தூா் ஒன்றியம், புதூா்நாடு ஊராட்சி மலைப்பகுதி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 357 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 357 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித... மேலும் பார்க்க

வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி: வாணியம்பாடி வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பிருந்தாவன் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.வாணியம்பாடி வட்ட அளவிளான தடகளப் போட்டிகள் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

ஆம்பூா்: ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.விழா விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. மூலவா் சரஸ்வதி தேவி, நந்தி, வேணுகோபாலசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்ப... மேலும் பார்க்க