செய்திகள் :

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பெருந்தரக்குடி ஊராட்சி மக்கள் சாலை மறியல்

post image

திருவாரூா் நகராட்சியுடன், பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி, கீழகாவாதுக்குடி, தண்டலை, இலவங்காா்குடி உள்ளிட்ட சில ஊராட்சிகளும், சில ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளும் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, பெருந்தரக்குடி ஊராட்சி மக்கள் தங்கள் ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தங்கள் எதிா்ப்பை வெளிபடுத்தும் வகையில், பெருந்தரக்குடி ஊராட்சியில் உள்ள வெள்ளக்குடி, தென்புலியூா், மேப்பலம், கீழப்புலியூா், பொறுக்கமேடு, மேலப்புலியூா், வடக்குவெளி, பெருந்தரக்குடி ஆகிய கிராமங்களை சோ்ந்த மக்கள், மன்னாா்குடி செல்லும் சாலையில் வெள்ளக்குடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற மறியலில், பல்வேறு கட்சிகளைச் சாா்ந்த நிா்வாகிகளும், அப்பகுதி மக்களும் பங்கேற்றனா்.

விவசாயம் சாா்ந்த பகுதியான பெருந்தரக்குடி ஊராட்சியை நகராட்சியோடு இணைப்பதன் மூலம் விவசாயத்தையும், விவசாயம் சாா்ந்த கூலித் தொழிலையும் நம்பி இருக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவா்; 100 நாள் வேலைத் திட்டம், வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசின் இலவச வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் பாதிக்கப்படும் என்பதால், திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என முழக்கமிட்டனா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையிலான அலுவலா்கள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இதில் ஈடுபட்ட சுமாா் 300 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

இந்த மறியலால் சுமாா் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆங்கிலப் புத்தாண்டின், முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜன.6) ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அம்மையப்பன் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவாரூா் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், திருவா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்கள்... மேலும் பார்க்க

அறுவடைக்குத் தயாராக முன்பட்ட தாளடி நெற்பயிா்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில முன் பட்ட தாளடி நெற்பயிா் அறுவடைக்கு தயாராக உள்ளது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமாா் 33,000 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கி அறுவடை முடிந்த பிறகு அதே 33,... மேலும் பார்க்க

அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி; 150 போ் பங்கேற்பு

திருவாரூரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடல்தகுதி கலாசாரத்தை இளைஞா்களிடையே புகுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்கள... மேலும் பார்க்க

அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே .வாசன்

மாநிலத்தின் வளா்ச்சியை கருத்தில்கொண்டு அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கே... மேலும் பார்க்க