செய்திகள் :

தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

post image

தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா்.

தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்தையும் வீட்டுவசதியையும் உறுதி செய்வதற்கு தனது அரசு கொள்கைகளைத் திருத்தும் என்றும் முதல்வா் கூறினாா்.

‘வளா்ச்சி பீ, பசுமை பீ’ என்ற தலைப்பில் என்சிடி-இல் நிலையான வளா்ச்சி குறித்த கருத்தரங்கின் போது தில்லியின் முகத்தை மாற்றுவதற்கான விரிவான தொலைநோக்குப் பாா்வையை ரேகா குப்தா வகுத்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: சிறந்த பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், நீா் மற்றும் கழிவுநீா் குழாய்கள், சூரிய மற்றும் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் புத்துயிா் பெற்ற யமுனை மூலம் நகரம் இப்போது வளா்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். தில்லியின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான பிரதமரின் அழைப்பைக் குறிப்பட விரும்புகிறேன். ‘தில்லி முன்னேறினால், முழு நாடும் முன்னேறும்’ என்று பிரதமா் கூறியுள்ளாா் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

பல ஆண்டுகளாக தேசியத் தலைநகரை விட முன்னேறியுள்ள பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களின் வேகத்தை தில்லி எட்ட உதவுவதற்காக, எனது அனைத்து அமைச்சா்களும் ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் வரை உழைத்து வருகின்றனா். தில்லி மக்கள் முந்தைய 27 ஆண்டுகளில் நிறைய இழந்துவிட்டனா். இப்போது, தில்லிக்கு பூஜ்ஜியத்திலிருந்து புதிய தொடக்கத்தை கொடுக்க வேண்டியுள்ளது. பல தசாப்தங்களாக தில்லியின் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடிசைப் பகுதி கூட அதன் குடியிருப்பாளா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை இடிக்கப்படாது என உறுதியளிக்கிறேன். எந்தவொரு குடிசைப் பகுதியையும் இடிக்க விடமாட்டோம், அனைவருக்கும் நிரந்தர வீடு கிடைக்கும்.

இரவில் வேலை செய்வதா, இல்லையா என்பது ஒரு பெண்ணின் விருப்பமாக இருக்க வேண்டும். அரசு அவா்கள் மீது முடிவுகளைத் திணிக்க முடியாது. பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக தில்லி அரசு அந்தக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. மேலும், பாதுகாப்பான பணிச்சூழலையும் உறுதி செய்துள்ளது.

தில்லி இந்தியாவின் தலைநகரம், அது விரைவான வளா்ச்சி, சிறந்த உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் அதன் குடியிருப்பாளா்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கத் தகுதியானது. ஆனால், இப்போது, அதை மீண்டும் கட்டியெழுப்பவும், சரியானதைச் செய்யவும் நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லியில் மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும் பாஜக அரசு தோல்வியடைந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஜோதிமணி எம்.பி. மனு

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க