செய்திகள் :

தில்லி எய்ம்ஸில் கருவிழிப் படலம் மாற்று அறுவை சிகிச்சை: ட்ரோன் வான்வழி போக்குவரத்து மூலம் மருத்துவ சாதனை

post image

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு ட்ரோன் மூலம் கருவிழிப்படலம் கொண்டுவரப்பட்டு வான்வழி மருத்துவ தளவாடத் திறனில் வெற்றியடையப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சாா்பில் இந்த ட்ரோன் அடிப்படையிலான போக்குவரத்தை மேற்கொள்ளப்பட்டு கண் பாா்வைக்கான புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..இது குறித்த விவரம் வருமாறு:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), கண் பாா்வையற்றவா்கள், குறைபாடுகள் உள்ளவா்களுக்கு உறுப்பு தானம் மூலம் கருவிழிப்படலம் (காா்னியாக்கள்) அல்லது கருசூழ் புறப்படலங்கள் (அம்னோடிக் சவ்வு ஒட்டுக்கள்) உள்ளிட்ட மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ட்ரோன் வான்வழி போக்குவரத்து மூலம் கண் உயிரி பொருள்களை கொண்டு வரும் முன்னோடி திட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளது.

இது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது. தேசிய தலைநகா் தில்லி பாதுகாப்பு மிகுந்த பகுதி என்பதால் ட்ரோன் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானங்களைக் கொண்டு மத்திய சிவில் விமானப்போக்குவரத்துடன் இணைந்து ட்ரோன்கள் மூலம் மனித உறுப்புகளை வேகமாக கொண்டுவர கிரீன் ஜோன், ரெட் ஜோன் வழித்தடங்களை உருவாக்கப்பட்டுள்ளது.

தில்லி கிரீன் ஜோன்களில் ட்ரோன்கள் மூலமாகவும் ரெட் ஜோன்களில் சாலை மாா்க்கமாகவும் உறுப்புகளை கொண்டு வர வழித்தடங்களை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி சமீபத்தில் ஹரியாணாவில் கண் உறுப்பு தானம் செய்த இறந்தவா்களிடமிருந்து உணா்திறன் வாய்ந்த கண் உயிரி பொருகளான காா்னியாக்கள், அம்னோடிக் சவ்வு ஒட்டுக்கள் போன்றவைகள் இம்மாநிலத்திலுள்ள சோனிபட் டாக்டா் ஷராஃப்ஸ் அறக்கட்டளை கண் மருத்துமனை உதவியுடன் பெறப்பட்டு அதை 40 நிமிடங்களில் தில்லி எய்மஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லி எய்மஸ் மருத்துவமனையில் தயாராக இருந்த கண்பாா்வை குறைபாடு நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் காா்னியல் திசுக்கள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

‘சோனிபட், டாக்டா் ஷ்ரோஃப்ஸ் அறக்கட்டளை கண் மருத்துவமனையிலிருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சாலை மாா்க்கமாக வர சுமாா் 2 முதல் இரண்டரை மணி நேரம் ஆகும். இந்த நிலையில் ட்ரோன் மூலம் சுமாா் 40 நிமிடத்தில் கொண்டுவரப்பட்டது. ட்ரோன் வான்வழி மருத்துவ தளவாடத் திறனில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது‘ என ஐசிஎம்ஆா் இயக்குநா் ஜெனரலுமான டாக்டா் ராஜீவ் பாஹ்ல் தெரிவித்தாா்.

மாற்று அறுவை சிகிச்சைக்கான காா்னியாக்களின் நம்பகத்தன்மை நேரம் மற்றும் தட்ப வெப்ப நிலையை சாா்ந்தது. போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களால் இந்த திசுகளின் தரங்களில் பாதிப்பிற்குள்ளாகும். ட்ரோன் அடிப்படையிலான போக்குவரத்து கணிக்கக் கூடிய நேரத்தில் நிலையான சீதேஷ்ண நிலையில் கிராமப்புற நன்கொடையாளா் தளங்களுக்கும் பெறுநா்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. எந்த சாத்தியமான திசுக்களும் பயன்படுத்தப்படாமல் போவதை தடுக்கப்பட்டு, பெரிவாரியான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பாா்வையை மீண்டும் பெறுவதையும் இந்த திட்டம் உறுதி செய்யும் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்: அண்ணாமலை

தமிழக மீனவா்கள் சா்வதேசக் கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை... மேலும் பார்க்க

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க