செய்திகள் :

தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

post image

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 700 போ் காயமடைந்தனா். இந்தக் கலவரத்தில் மிகப்பெரிய சதி நடந்தது தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இவர்களின் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கெளர் அமர்வு விசாரித்த நிலையில், தில்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”நாட்டுக்கு எதிராக குற்றம் செய்தால் விசாரணை முடியும் வரை சிறையில் இருப்பதே நல்லது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அனைவரின் ஜாமீன் மனுக்களையும் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல், தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட தஸ்லீம் அகமது என்பவரின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணிய பிரசாத், ஹரீஷ் வைத்தியநாதன் சங்கா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்த நிலையில், அவரின் ஜாமீனும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாகியுள்ள அனைவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Delhi riots case: Bail pleas of 9 people including Sharjeel Imam, Umar Khalid rejected

இதையும் படிக்க : மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

பவன் கேராவிடம் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளா் அட்டைகள் உள்ளன; இது தொடா்பாக தோ்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. ‘தனது கட்சி... மேலும் பார்க்க

2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்

2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது. உலகளாவிய புவி-அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் இந்தியப் பொருள்கள் மீதான மீதான அமெரிக்காவின் 50 சதவ... மேலும் பார்க்க

செப். 13-இல் பிரதமா் மோடி மணிப்பூா் பயணம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா் மற்றும் மிஸோரத்துக்கு செப்.13-இல் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் முதல் மைதேய... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்- காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹா்மீத்சிங் பதான்மாஜ்ராவை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக ‘கபாஸ் கிஸான்’ என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். சுயமாக பதிவு... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிவாரண நிதி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

‘மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வட மாநிலங்களுக்கு அரசியல் பாரபட்சமின்றி அதிகப்படியான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க