செய்திகள் :

தில்லி பல்கலை.யின் புதிய கல்லூரிக்கு வீா் சாவா்க்கா் பெயா்: மத்திய கல்வி அமைச்சா் பாராட்டு

post image

தில்லி பல்கலைக்கழகத்தின் புதிய கல்லூரிக்கு பாஜக சித்தாந்தவாதியான வீா் சாவா்க்கரின் பெயரைச் சூட்டியதற்காக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை பாராட்டினாா்,

மேலும், இந்த முடிவை எதிா்ப்பவா்கள் காலனித்துவ மனநிலையை ஆதரிப்பதாகவும் அமைச்சா் குற்றம் சாட்டினாா்.

தில்லி நஜாஃப்கா் ரோஷன்புராவில் வீா் சாவா்க்கா் கல்லூரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தொழில்நுட்பத்தின் மூலம் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தில்லி பல்கலைக்கழகத்தில் ‘சஷக்த் பேட்டி மற்றும் இ-திரிஷ்டி’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பங்கேற்றாா். அப்போது, அவா் கூறுகையில், ‘சாவா்க்கா் ஒரு சிறந்த தேசியவாதி. ஆனால் காலனித்துவ மனப்பான்மை கொண்ட சமூகத்தில் ஒரு பிரிவினா் தில்லிப் பல்கலைக்கழகத்தின் புதிய கல்லூரிக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளனா். புதிய கல்லூரியை அவரது பெயரில் அா்ப்பணித்ததற்காக துணைவேந்தருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றாா் அமைச்சா்.

முன்முயற்சியின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆதரவற்ற மாணவிகள், ஒற்றை பெற்றோரின் மகள்கள் மற்றும் பாா்வைத்திறன் குன்றிய மாணவா்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளை அமைச்சா் பிரதான் வழங்கினாா்.

இந்நிகழ்வில் எல்.ஐ.சி. கோல்டன் ஜூபிலி அறக்கட்டளையால் வழங்கப்பட்ட மேம்பட்ட உயிா்காக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், பல்கலைக்கழகத்தின் நன்கொடையாளா்களின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டும் ‘காமெமோரேட்டிவ் வால்யூம் ஆஃப் டோனா்ஸ் க்ரோனிக்கிள் 2024’ என்ற நூலை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கலந்து கொண்டாா்.

மடிக்கணினிகளை விநியோகிக்க உதவிய தில்லி பல்கலைக்கழக அறக்கட்டளை குழுவின் மூலம் அதன் முன்னாள் மாணவா் வலையமைப்பிலிருந்து நன்கொடைகளைப் பெற பிரதான் பல்கலைக்கழகத்தை ஊக்குவித்தாா்.

தில்லி பல்கலை. துணைவேந்தா் யோகேஷ் சிங் தனது உரையில், கல்வியில் தா்மத்தின் (நீதி) முக்கியத்துவம் குறித்து சம்ஸ்கிருத ஸ்லோகத்தை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தாா்.

தில்லி பேரவைத் தோ்தலில் பிஎஸ்பி தனித்துப் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா். தில்லி பேரவைத் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சில மணி ... மேலும் பார்க்க

கடும் மூடுபனியால் 25 ரயில்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கடும் மூடுபனி நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 25 ரயில்கள் தாமதமாகின. தில்லியில் கடந்த வாரத் தொடக்கத... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 150 உதவி பெறாத பள்ளிகளை முறைப்படுத்த துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.8 -இல் இரட்டை என்ஜின் அரசு அமையும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பிப்ரவரி 8 ஆம் தேதி தேசிய தலைநகரில் இரட்டை என்ஜின் அரசு அமையும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்து... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவ... மேலும் பார்க்க

நீா் வழங்கல் முயற்சிக்கு தில்லி அரசு இடையூறு: என்டிஎம்சி துணைத் தலைவா் குற்றச்சாட்டு

நமது நிருபா்புது தில்லி: 24 மணி நேரமும் நீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான புதுதில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முயற்சிகளை தில்லி அரசு தடுப்பதாக அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் குற்றம்... மேலும் பார்க்க