செய்திகள் :

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

post image

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தில்லி சதார் பஜார் பகுதியைச் சேர்ந்த 13 வயது, 11 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் மூவர் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். ஆன்லைன் கேமில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வாஹித் என்பவருடன் நண்பர்களாகி உள்ளனர்.

இந்த நிலையில், மும்பையில் நட்சத்திரங்களைச் சந்தித்ததாகவும் உங்களையும் சந்திக்க வைக்க முடியும் என வாஹித் கூறியதை அடுத்து, வீட்டில் யாருக்கும் தெரியாமல் மூன்று சிறுவர்களும் ஜூலை 25 ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தேடுதல் பணியைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினர் சிறுவர்களை தேடுவதை அறிந்த வாஹித், சிறுவர்களுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். இதையடுத்து, சிறுவர்கள் தங்களின் திட்டத்தை மாற்றிக் கொண்டு நாசிக் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

கண்டுபிடித்தது எப்படி?

முதல்கட்ட விசாரணையில், சிறுவர்கள் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ஜல்னாவைச் சேர்ந்த வாஹித் என்பரைக் காணச் செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஜ்மேரி கேட் நோக்கி செல்வதை கண்டுபிடித்தனர். பின்னர், புதுதில்லி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் சென்றிருக்கலாம் என சந்தேகித்தனர்.

சிறுவர்கள் சென்ற நேரத்தைக் கணக்கிட்டு, சச்கண்ட் விரைவு ரயில் மூலம் மும்பை சென்றிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், ரயில்வே காவல்துறையுடன் இணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.

ஜல்னாவில் உள்ள வாஹித் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதனிடையே, சிறுவன் ஒருவன் உபயோகித்த செல்போன் எண்ணைக் கண்டறிந்த காவலர்கள், அதனை வைத்து நாசிக் ரயில் நிலையத்தில் இருப்பதை உறுதி செய்து பிடித்துள்ளனர்.

Three boys from Delhi have secretly gone to Mumbai to meet Salman Khan.

இதையும் படிக்க : மோடி வாய் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை மருத்துவக் கல்வி இயக்ககம்

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் விடுதி, உணவு, போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசு தீவிர ஆலோசனை - அமைச்சா் பியூஷ் கோயல்

இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ‘அமெரிக்க வரி விதிப்பின் சாதக, பாதகங்கள் குறித்... மேலும் பார்க்க

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல் கடும் தாக்கு

‘இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனா். தொழிலதிபா் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருள... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.நட... மேலும் பார்க்க

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க