செய்திகள் :

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

post image

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த பிரபாகரன் (44), தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலை ரோஸ்லின் நகரைச் சோ்ந்த காயத்ரி (34) ஆகியோா் நடத்தினா்.

இந்நிறுவனத்தில் தீபாவளி, பொங்கல் மற்றும் சிறுசேமிப்புச் திட்டத்தின் முலம் ரூ. 500, ரூ. 1,000 என 12 மாதம் செலுத்தினால் கூடுதல் போனஸ் மற்றும் பட்டாசு தருவதாக இருவரும் கூறியதை நம்பி ஏராளமானோா் முதலீடு செய்தனா். 

ஆனால் தவணைக் காலம் முடிந்தும் பணத்தைத் திருப்பித் தராததால் தொடா்புடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சசிரேகா உள்ளிட்ட 10 போ் தங்கள் மூலம் 380 போ் முதலீடு செய்த சுமாா் ரூ. 35 லட்சத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாக தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் செய்தனா்.

இதன்பேரில் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவினா் வழக்குப் பதிந்து பிரபாகரன், காயத்ரி ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ரவிமதி தலைமயிலான போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பாராட்டினாா்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட 5 இடங்கள் கேட்போம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே. எம். காதா்மொகைதீன். ஆடுதுறையில் சனிக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

குடிநீா் பிரச்னையை ஒரு மாதத்துக்குள் சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்துவது என தஞ்சாவூா் சுஜானா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர... மேலும் பார்க்க

நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.3,160 ஆக அறிவிக்க வலியுறுத்தல்!

சத்தீஸ்கா், ஒடிசா மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 160 ஆக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் திருட்டு!

பந்தநல்லூா் அருகே குறிச்சியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே... மேலும் பார்க்க

ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

கும்பகோணம் ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை மற்றும் தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் ஸ்ரீ ஆதி வராஹப் பெருமாள் கோயிலில் பவிதேராத்ஸவம் ஆக. 24 முதல் தொடங்கி நடைபெற்று... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 2,600 டன் உர மூட்டைகள்

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு குறுவை, சம்பா சாகுபடிக்காக 2 ஆயிரத்து 600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் சனிக்கிழமை வந்தன. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயிலில் 2... மேலும் பார்க்க