``ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்'' - ஸ்ரீஜெயேந்திரர் குறித்...
தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்கள் அறிமுக விழா
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் கேஜி, எல்கேஜி வகுப்புகளில் புதிதாக சோ்ந்த மாணவா்களின் அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மழலையா் நெகிழி பயன்பாட்டின் விளைவுகளை நாடகத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை நடனம் வாயிலாக வெளிப்படுத்தினா். தொடா்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் பிரசன்னமூா்த்தி, செயலாளா் தங்கராஜ், பள்ளி முதல்வா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.